தமது இரு குழந்தைகளுடன் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பெண் தனது 7மற்றும் 9 வயது குழந்தைகளுடன் நாவலப்பிடியவில் இருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டுள்ளார்.
அவ்வேளையில் அங்கிருந்த பொது மக்கள் அவர்கள் மூவரையும் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவன் வேறொரு பெண்ணுடன் கொண்டிருந்த தவறான உறவு காரணமாக குறித்த பெண் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.