இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)

427
ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் கமிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த பாகிஸ்தான் அணி 48.4 ஓவரில் 212 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஹசன் மோஸின் அதிகபட்சமாக 86 ஓட்டங்கள் சேர்த்தார்.

பின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியின் கமிந்து மெண்டிஸ் 68 ஓட்டங்களும், விக்கெட் கீப்பர் விஷாத் டி சில்வா 46 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை அணி 46.4 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் பாகிஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசியுள்ளார்.

இந்த போட்டியின்போது வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு, இடது கை மூலமாகவும், இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு வலது கையாலும் பந்து வீசி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

SHARE