இரண்டு சிறுமிகளை கொடுமைப்படுத்திய இளம் ஆசிரியை! வெளியான அதிர்ச்சி வீடியோ

255

 

ஆறு வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் சிறுமிகளை அவர்கள் நடன வகுப்பு ஆசிரியை அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Anhui மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் CCTV கமெராவில் பதிவான ஒரு வீடியோவில், பள்ளியின் நடன வகுப்பில் பத்துக்கும் மேற்ப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு ஆசிரியை நடனம் சொல்லி தந்து கொண்டிருக்கிறார்.

அப்போது, அதில் இருந்த இரண்டு சிறுமிகளை தனியாக தரதரவென இழுத்து சுவற்றில் அவர் தள்ளுகிறார்.

பின்னர், இரண்டு சிறுமிகளையும் இரக்கமின்றி தன் கால்களால் எட்டி உதைப்பதும், அவர்களை தலையில் கொட்டுவதுமாக இருக்கிறார்.

இரண்டு சிறுமிகளில் ஒரு சிறுமியிடம் அதிக கோபத்தை காட்டும் ஆசிரியை, அவரை அதிகமாக அடித்து துன்புறுத்துவது போலவும் அந்த சிறுமி அழுவது போலவும் வீடியோ காட்சியில் உள்ளது.

இந்த காட்சி வெளியானதை தொடர்ந்து அந்நாட்டின் பள்ளிகல்வி துறை நிர்வாகம் அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்ததுடன் அவர் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE