இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு சாரதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

237

யாழ் நாவற்குளி  பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு வயல்களுக்குள் குடைசாய்ந்த விபத்தில் காயமடைந்த வாகனச் சாரதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவற்குளி – கேரதீவு ஏ 32 வீதியில் மறவன்புலோ ஆலடிச் சந்தியை அண்மித்த பகுதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வன்னிப் பகுதியிலிருந்து கருங்கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும், நாவற்குளியிலிருந்து சென்ற டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.

காயமடைந்த வாகனச் சாரதிகள் அவ்வழியே வந்த நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதோடு நாவற்குளி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE