இரண்டு தோணிகளில் கால் வைக்க வேண்டாம்- புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு கஜேந்திரகுமார் ஆலோசனை.

287

kajendra 1தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும் ஏற்றுக்கொண்டு அதேவேளை தமிழ் மக்கள் பேரவையிலும் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தமது நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

சில கட்சிகள் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து கொண்டு தமிழ் மக்கள் பேரவையிலும் அங்கத்தவர்களாக இருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இருப்பதா அல்லது தமிழ் மக்கள் பேரவையில் இருப்பதா என உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகிய இரு அமைப்புக்களிலும் சமகாலத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பெயர்களையோ அல்லது தனிநபர்களின் பெயர்களையோ கஜேந்திரகுமார் குறிப்பிட்டு சொல்லவில்லை.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிற்றம்பலம் ஆகியோரும் தமிழ் மக்கள் பேரவையிலும் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE