முல்லைத்தீவை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் கடையை சுகாதாரப் பிரிவினர் திடீரென பரிசோதித்த நிலையில் காலாவதியாகிய உணவுப் பொருள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வர்த்தகர் முல்லைத்தீவு நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
காலாவதியான பொருளை விற்பனை செய்ய வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த வர்த்தகர் பணத்தை செலுத்தும் வரை நீதிமன்ற சிறைச்சாலையில் இரண்டு மணிநேரத்துக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதன் போது சிறைச்சாலைக்குள் சிறுநீர் மணமும் வேறு சில உடலுக்கு ஒவ்வாத மணங்களுடன் சுகாதாரமற்ற முறையில் சிறைச்சாலை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் வாந்தி தலையிடி போன்ற உடல்நிலைக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல்நிலையை சீர் செய்வதற்கு நோய் நிவாரணிகளை பாவித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.