திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளை இணைத்து கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலையில் கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சேருநுவர கங்கைப் பகுதியிலிருந்து கந்தளாய் பிரதேசத்துக்கு இரண்டு மாடுகளை இணைத்து அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போது கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.