இலங்கையின் ஆட்சிகாலத்தில் இவ்வாறான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிடிருப்பது இதுவே முதற்தடவையாகும் என்று கடற்படை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கடற்படையின் அறி க்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பாதுகாப்பு போர்க்கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
குறிப்பாக கடந்த ஆண்டின் ஆறுமாத காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 25 போர்க்கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன.
இதில் ரஷ்யா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பங்களாதேஷ், ஓமான், இந்தியா, பாகிஸ்தான், கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளன.
அதேபோல் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு சர்வதேச போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன.
பிரித்தானியா, தென்னாபிரிக்கா, ஓமன், நைஜீரியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இலங்கைக்கு வரவுள்ளன.
மேலும் இவ்வாறு இலங்கைக்கு வரும் போர்க்கப்பல்களுடன் இலங்கையின் கடற்படையினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதுடன் அந்தந்த நாடுகளுடன் தமது பாதுகாப்பு உறவையும் பலப்படுத்தும் வகையில் செயற்படுவர்.
அதேபோல், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒரு ஆண்டு காலத்தில் இவ்வாறு சர்வதேச நாடுகளின் அதிகளவான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.