இரண்டு வயதும் 6 மாதங்களுமான குழந்தையை கொடூரமாக கடித்துக் காயப்படுத்திய தந்தை ஒருவரை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
22 வயதான பழைய எளுவங்குளத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பிரம்பால் குழந்தையைத் தாக்கிய பின்பே இந்த நபர் குழந்தையை கடித்து துன்புறுத்தியதாக பெண்ணொருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குழந்தையின் உடலில் அதிகமாக காயங்கள் காணப்படுவதாகவும் இந்தக் குழந்தையை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் வனாத்தவில்லுவ பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.