பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு விலைமாது பெண்களை அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Rurik Jutting(31) என்ற நபர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து தற்போது வங்கி ஒன்றில் உயர் பதவியில் வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஹோங்கோங் நகருக்கு சுற்றுலா சென்ற அவர் அங்குள்ள நட்சத்திர ஹொட்டலில் தங்கியுள்ளார்.
இதே நகரில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த Sumarti Ningsih(23) என்ற பெண் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இவருக்கு இந்தோனேசியாவில் ஒரு வயது குழந்தை உள்ளது.
நட்சத்திர ஹொட்டலில் தங்கிய நபர் இந்த விலைமாது பெண்ணை வரவழைத்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக கொக்கைன் போதை பொருளை எடுத்துக்கொண்டு அவர் விலைமாது பெண்ணை பலாத்காரம் செய்து கட்டிப்போட்டுள்ளார்.
பின்னர், பெண்ணை நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய புருவங்களை வெட்டி எடுத்து பல முறை பலாத்காரம் செய்து அதனை தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துக்கொண்டார்.
சுமார் 4 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் விலைமாது பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் நிகழ்ந்து 4 நாட்களுக்கு பிறகு Seneng Mujiasih(26) என்ற விலைமாது பெண்ணை ஹொட்டலுக்கு வரவழைத்து அவரையும் கொடூரமாக பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த இரட்டை கொலைகளையும் அவர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார். அதில், போதை மருந்து பழக்கம் காரணமாக இவர்கள் இருவரையும் கொலை செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.
விலைமாதுகளை கொலை செய்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபரின் மீதான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.