இரத்தத்தில் அதிகமாக கொழுப்பு உள்ளதா?… கவலையே வேண்டாம் இதை மட்டும் செய்ங்க!..

182

blood_cholostrol_001-w245

காளான் மழைக் காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர்.

ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில வ விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளானின் பயன்கள்

காளான்களில் லெண்ட்டைசின்(lentysine) எரிட்டைனின்(eritadenin) என்ற வேதிப் பொருட்கள் அதிகமாக உள்ளன.

இதனால், இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கொளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாக குறைக்கிறது.

மேலும், இதில் உள்ள எரிட்டனைன் (eritadenin)கொழுப்புகளை கரைத்து இரத்தத்திலிருந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளியேற்றி பிர திசுக்களுக்கு அனுப்பி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

இதனால், இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்பட உதவுகிறது.

மேலும், காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிரந்த நிவாரணி ஆகும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள், மலட்டுத் தன்மை போன்றவற்றை குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் குடிப்பதால், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காளானை முட்டைகோஸ் அல்லது பச்சைபட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுபுண், ஆசணப்புண் குணமாகும்.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளா சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் வலு பெறும்.

மேலும், காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் தாய்மார்கள் இதை உண்பதை தவிர்ப்பது நல்லது.

 

SHARE