ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையதாக கூறப்படும் சிவப்பு மான்களின் இரத்தத்தில் குளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த தலைவராக திகழும் ரஷ்ய ஜனாதிபதி புடின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மற்றும் பல்வேறு மருத்துவ நலன்களை பெற Altai மலைக்கு சென்று சிவப்பு மானின் இரத்தத்தில் குளிப்பார் என தெரிகிறது.
அதாவது, Maral மான்கள் என கூறப்படும் சிவப்பு மான்களின் கொம்புகளில் இயற்கையான வயாகரா மற்றும் ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள் இருக்கிறதாம்.
இவ்வகை மான்களின் கொம்புகளை வெட்டி அதன் இரத்தத்தை குளியல் தொட்டியில் ஊற்றி குளிப்பது என்ற வழக்கம் பண்டை காலத்திலிருந்தே Altai மலைகளில் நடைமுறையில் இருப்பதாக தெரிகிறது.
இந்த இடத்துக்கு பல தடவை செல்லும் புடின் இரத்தம் உள்ள குளியல் தொட்டியில் குளிப்பார் என தெரிகிறது.
ரஷ்யாவின் பிரதமர் Dmitry Medvedev-யும் இரத்த குளியலை மேற்கொள்வாராம்.
இது குறித்து புடின், Alexander Zuykov என்ற புகழ்பெற்ற மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே இதை செய்வதாக தெரியவந்துள்ளது.
மான் இரத்தத்தில் குளிப்பதால் உடல் எலும்புகள், தசைகள், பற்கள் வலுவாகும் என கூறப்படுகிறது.
மேலும், ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினைகள் கூட குணமாகும் என தெரிகிறது.
முதலில் சிவப்பு மான்களின் கொம்புகளில் உள்ள இரத்தம் எடுக்கப்பட்டு சூடு செய்யப்படுகிறது. பிறகு குளியல் தொட்டிகளில் இரத்தம் ஊற்றப்படுகிறது.
இது போன்ற நவீன யுகத்தில் மான்களின் இரத்தத்தில் குளிப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என மிருக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.