இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட்

235

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

மருந்தே உணவு என்பது தான் தமிழர்களின் வாழ்க்கை முறை. நம்முடைய அன்றாட உணவு வகைகளில் சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால் தான் உடலில் உண்டாகும் நோயின் பிடியில் இருந்து சிக்காமல் இருக்க முடியும்.

அந்த வகையில் பார்க்கும் போது பீட்ரூட் எண்ணிலடங்காத மருத்துவ குணங்களைக் கொண்ட ஒருவகை கிழங்கு ஆகும்.

இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் சொல்வார்கள்.

பீட்ரூட்டில் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின், விட்டமின் C, விட்டமின் A, தயாமின், ரைபோபிளேவின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

  • பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாகும்.
  • பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து குடித்து வந்தால், சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
  • பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி அதனுடன் சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு போன்றவைகள் குணமாகும்.
  • பீட்ரூட் எடுத்து கொண்டு தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால், மூலநோய் குணமாகும்.
  • பீட்ரூட்டை தினமும் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை குணமாகும்.
  • பீட்ரூட் சாறு மட்டும் எடுத்து குடித்தால், வயிற்றில் உண்டாகும் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் அதிகப்படுத்தும்.
  • பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் நனைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
  • சொறி, பொடுகு, ஆறாத புண்கள் இருந்தால், அதில் பீட்ரூட்டை வேக வைத்த நீர் மற்றும் அதனுடன் வினிகரைக் கலந்து புண்கள் மேல் தடவி வந்தால், விரைவில் குணமாகும்.
  • நமது அன்றாட உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு குளிர்ச்சியை தரும், மலச்சிக்கலை போக்கும். மேலும் கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் செய்து பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
SHARE