பிரான்ஸ் இரயில் நிலையத்தில் ஆயுதமேந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தவுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கிருந்த மக்களை பொலிசார் உடனடியாக வெளியேற்றினர்.
பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள நைம் இரயில் நிலையத்தில் மூன்று ஆயுதமேந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தவுள்ளதாக, பொலிசாருக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து இரவு 09.15 மணி உள்ளூர் நேரப்படி அங்கிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவனிடம் போலியான துப்பாக்கி இருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெறவில்லை என்பதை உறுபதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.