இரயில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

188

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)

அமெரிக்காவில் ரயிலுடன் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவில் செல்ல தங்களது சொந்த வாகனத்தில் புறப்பட்ட இந்த குடும்பம் லாஸ் அனிமாஸ் பகுதியில் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

பயணிகள் ரயில் கடந்து செல்லும் பாதையில் தண்டவாளத்திலேயே இவர்களது கார் சிக்கியதாலே விபத்து நேர்ந்துள்ளதாக கொலராடோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி இறந்த ஸ்டீவ் மில்லர் அவரது மனைவி கிறிஸ்டினா மற்றும் இவர்களது 3 குழந்தைகளும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்களது 4 வயது மகள் மட்டுமே இந்த விபத்தில் இருந்து படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளார். அவரை மீட்டு டென்வர் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது குழந்தை ஹேத்தியின் நிலை தேறி வருவதாகவும் அபாய கட்டத்தை கடந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சம்பவத்தின்போது மது அல்லது போதை மருந்து பயன்படுத்தியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்றுள்ளனர்.

இந்த விபத்தில் ரயில் பயணிகள் எவருக்கும் காயமேற்படவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாகனத்தில் அதிவேகமாக மோதியதால் ரயிலில் சின்னதாய் சேதம் ஏற்பட்டதாகவும், மாலையில் சரிசெய்யப்பட்டு பின்னர் பயணத்தை தொடர்ந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE