இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதோ ஆரஞ்சு பழச்சாறு

332

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது.

இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை வலுப்பெறவைக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.

நாள் தோறும் உழைத்து வருபவர்கள் இரவில் தூங்கும் போது நேற்றைய பிரச்சனை, இன்றையை பிரச்சனை என அனைத்தையும் மனதில் குழப்பிகொண்டு தூக்கம் இல்லாமல் அவதிப்படுவார்கள். அவர்களின் குறையை போக்குவதில் ஆரஞ்சுபழத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

இரவு தூங்குவதற்கு முன்னர் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றுடன், சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.

SHARE