இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கை!

214

   11-10-2016-16-10-29-1
கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டு ள்ளது.
இதன் தொடர்ச்சியாக யூனியன்பிளேசில் உள்ள குறிப்பிட்ட இரவுவிடுதியின் நிர்வாகம் தனது பணியாளர்களிற்கு இறுக்கமான உத்தரவுகளை வழங்கி வாய்ப்பூட்டு போட்டுள்ளது. பொலிஸாரை தவிர வேறு எவருடனும் பேசக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும் அன்றிரவு இடம்பெற்ற சம்பவங்களை மூடிமறைப்பதற்கு ஏற்கனவே அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது,இதன் காரணமாக ஜனாதிபதியின் மகனுடன் வந்த கும்பலால் தாக்கப்பட்ட ஓருவர் தன்னால் எவரையும் அடையாள காணமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட ஹோட்டலின் நிர்வாகம் தனது முகாமையாளர் ஓருவரை பயன்படுத்தி குறிப்பிட்ட சம்பவத்தில் ஜனாதி பதியின் மகன் ஈடுபடவில்லை என அறிக்கையை வெளியிட்டுள்ளது. வீடியோ அறிக்கையொன்றில் முகாமையாளர் கிறிஸ்டொபர் கேர்ன்” அன்றிரவு சம்பவம் இடம்பெற்றது உண்மை,ஊடகங்கள் மிகமுக்கியமான பிரமுகரின் மகன் இதில் ஈடுபட்டதாக ஊடக ங்கள் தெரிவித்துள்ளன,ஆனால் அவ்வேளையில் பணியில் இருந்த என்னால் அதனை மறுக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நள்ளிரவு விடுதி குறிப்பிட்ட கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ளது அவ்வேளை குறிப்பிட்ட முகாமையாளர் விடுதியின் வாயில் இருந்திருக்க வாய்ப்பேயில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர், வழமையாக விடுதியின் வாயிலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரம் காணப்படுவர்,முகாமையாளர்கள் காணப்படுவதில்லை,குறிப்பிட்ட சம்பவம் ஹோட்டலின் நுழைவாயிலில் இடம்பெற்றது அங்கு முகாமையாளர்கள் காணப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் என அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
மேலும் தாக்குதல் மேற்கொள்பவர்களை அடையாளம் காணகூடிய சூழ்நிலை நிலவுவதை சிசிடிவி கமராக்கள் காண்பித்துள்ளன, இந்தநிலையில் தாக்கப்பட்டவர் ஓருவர் தான் யாரையும் டையாளம் காணும் சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவிப்பதை ஏற்க முடியாது எனவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
SHARE