சிம்பு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்து வருகிறார். நடிகர்கள் என்றால் இதெல்லாம் கண்டிப்பாக செய்துவிட வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறார்.
பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆரவ், சிம்புவுடன் இருக்கும் சில புகைப்படங்களை பார்த்திருப்போம். அண்மையில் பேட்டி கொடுத்த ஆரவ், சிம்பு குறித்து பேசியுள்ளார். அதில், சிம்பு பயங்கரமான பிக்பாஸ் ரசிகர். தினமும் 9 மணி ஆனால் சிம்பு வீட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஓடும். இப்போது மஹத் உள்ளே இருந்தபோது நாங்கள் பார்த்து கலாய்த்துக் கொண்டு இருந்தோம்.
ஒரு பெரிய நடிகர் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் சிம்பு பழகுவார் என்று அவரை பற்றி பெருமையாக பேசியுள்ளார் ஆரவ்.