இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

223

 

மட்டக்களப்பு புதூர் நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டிருந்தார்.

பொருளாதாரம் தொடர்பாக கருத்தக்களைத் தெரிவித்தார்.

unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed

நாட்டின் பொருளாதாரத்தை நிரப்புவதற்கு 18ஆம் ஆண்டுவரை காத்திருக்கவேண்டிய நிலையை உருவாக்கியவர்கள் கடந்த ஆட்சியாளர்களே.

நாட்டிலே எங்கள் பொக்கிசத்தில் பணமில்லை. ஆதனால்தான் நாட்டின் ஜனாதிபதி மற்றம் பிரதமர் கூறியிருக்கின்றார்கள் வட்வரி போன்றவற்றினால் நாட்டின் வருமானத்தைப் பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ஏன்னென்றால் சென்ற அரசாங்கம் 10 வருடகாலமாக படிப்படிப்படியாக நாட்டின் பணத்தை காலி பண்ணிவிட்டார்கள். இதன்காரணமாக நாங்கள் பணத்தை சேர்க்கவேண்டும். இதுதான் உண்மை நிலை. கடந்த ஆண்டு இருந்து இன்றைவரை சுமார் 1 ½ வருடத்திற்குள் உங்கள் வயிற்க்கு சில பாதிப்புக்கு கிடைக்கும். நீங்கள் 5 ரூபாய்க்கு வாங்கும் பொருள் 7 ரூபாய்க்கு கிடைக்கும். இதைச் செய்வது சமூதாயத்திற்காக இந்த இலங்கை மக்களுக்காக. 2018ஆம் ஆண்டு வரை நீங்கள் பொறுத்திருங்கள்.

2018 ஆம் ஆண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய இலங்கை தேசம் முழுமையான ஒரு முன்னேற்றத்தைக் கொண்டுவருதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

2018ஆம் ஆண்டு நடுப்பகுதியில் திட்டமிட்ட செயற்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக வரும்.

நாட்டின் நடப்புக்கு நீங்கள் எல்லாம் வழிகோரவேண்டும். உங்களுடைய நற்பு, உறவு சமூதாயத்தின் ஒத்துழைப்பு இருக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது. இல்லையென்று நான் கூறவில்லை. இன்று எங்களைப் பார்த்தால் ஐக்கிய தேசிய கட்சியையும் திட்டுவீர்கள், எல்லோரையும் திட்டிக்கொண்டுதான் இருப்பீர்கள். ஏன் எங்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் பொருட்களுக்கான செலவீனம் குறைவாக இருக்கவேண்டும் போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.

ஆனால் அந்த பிரச்சினைகளை நாங்கள் அல்ல உருவாக்கியது. அந்த பிரச்சினையை உருவாக்கினவர் எங்களுக்கு முன் இருந்தவர்கள் என தெரிவித்தார்.

குறித்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட இந்து ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE