இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்கவுள்ளனர்!

311

இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க உள்ளனர்.

அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் துறைகளை பகிர்ந்து கொள்வதில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த முரண்பாடுகளை களைவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஒத்துழைப்பு நாடப்படவுள்ளது.

இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கு மட்டுமே துறைகள் ஒதுக்கீடு செய்பய்பட்டுள்ளன.

ஏனைய இராஜாங்க அமைச்சர்களுக்கு, அமைச்சரவை அமைச்சர்கள் வேண்டுமென்றே துறைகளை ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கீழ் இயங்கி வரும் பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தன, பிரதமரின் கீழ் இயங்கி வரும் தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவாகரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா ஆகியோருக்கு மட்டுமே துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய இராஜாங்க அமைச்சர்களுக்கு இதுவரையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இராஜாங்க அமைச்சர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலைமை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்களுக்காக சேவையாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை இராஜாங்க அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்.

SHARE