இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரின் மகன் மீது வழக்குத் தாக்கல்

161

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE