இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் பதவிகள் இடைநிறுத்தம்!

222

 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீதான விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை அந்தப் பதவியிருந்து இடைநீக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் தனது கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவியை இடைநீக்குமாறு பிரதமர் இந்தப் பரிந்துரையை ஜனாதிபதிக்கு இன்றிரவு அனுப்பிவைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த அரச நிகழ்வு ஒன்றில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

அதனால் தென்னிலங்கையில் மாத்திரமின்றி நாடாளுமன்றிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இராஜாங் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அந்த பதவியிலிருந்து நீக்குமாறு நாடாறுமன்றில் இன்று கோரப்பட்டது.

எனினும் அதுதொடர்பில் பதிலளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துவிட்டார். நாளை காலை நாடாளுமன்றில் பதிலளிக்கவிருக்கும் நிலையில் தனது இந்த தீர்மானத்தை பிரதமர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார் என அறியமுடிகிறது.

SHARE