
ஆணைக்குழுவின் ஊடாக காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு மேலதிகமாக இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே அவர்கள் கேள்விகள் கேட்பதை அவதானிக்க முடிந்ததாக அங்கு சென்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விடுதலைப்புலிகளை LTT என்று ஆங்கிலச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். CID யினரை அழகான தமிழில் புலனாய்வாளர்கள் என்றும் கூறப்பட்டதாக அங்கு சென்றோர் தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் LTTஎன்னும் சொல் விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கும் CID என்னும் சொல் மக்கள் அச்சத்துடன் வெறுப்புடனும் பயன்படுத்தும் சொல்லாகவே இருக்கின்றது.
ஆணைக்குழுவின் விசாரணையில் மக்கள் முன் பயன்படுத்த வேண்டிய சொற்கள் பற்றி ஆணைக்குழுவிடம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
சொற்களைப் பயன்படுத்திய விதத்தில் விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்கி இராணுவத்தினரை காப்பாற்ற முற்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் இறுதியில் இது தொடர்பாக மேலதிக விசாரணைக்கு எமது புலனாய்வாளர்கள் உங்கள் இல்லங்களுக்கு வருவார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
உங்கள் பிரதேசம் LTTயின் கட்டுப்பாட்டிலா இருந்தது, LTT யா அழைத்துச்சென்றார்கள். என்று வினவியதை அவதானிக்க முடிந்தது.
தமிழ்மக்கள் வரலாற்றில் புலனாய்வு என்னும் சொல் மதிப்பு உள்ளதாகவும் பெருமைமிக்கதாகவும் இருக்கின்றது.
அவற்றை தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கை புலனாய்வுப்பிரிவு நன்கு விளங்கிக்கொண்டவர்களாக இருக்கின்றனர்.
CID என்னும் சொல் மக்கள் மனங்களில் வெறுப்பாக மறுக்கப்பட்ட மறக்கப்படவேண்டிய சொல்லாக இருக்கின்றது.
விடுதலைப்புலிகள் என்னும் சொல் மக்கள் மிக மரியாதையுடன் பயன்படுத்துகின்றார்கள் விடுதலைப்புலிகளா செய்தார்கள் என்று கேட்டால் அவர்களிடம் இருந்து எவ்வித பதில்களும் வராது என்பது ஆணைக்குழுவிற்கு நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது.