இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலைப் பதவி வெற்றிடத்திற்காக ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தில் இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையாக கருதப்படும் இராணுவ பிரதம அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் அண்மையில் ஓய்வு பெற்றுக்கொண்டார்.
இந்தப் பதவிக்காக இராணுவத்தில் கடமையாற்றி வரும் ஐந்து பேரின் பெயர்ளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருசாந்த டி சில்வா, பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேஜர் ஜெனரல்களான மிலிந்த பீரிஸ், ஜனக ரட்நாயக்க, சுமேத பெரேரா, சுமித் மானவடுகே மற்றும் சன்ன குணதிலக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 25ம் திகதி தனது 55வது வயதை பூர்த்தி செய்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், ஓய்வு பெற்றுக்கொண்டார்.
இந்தப் பதவி வெற்றிடத்திற்காக காலாற்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வழங்கப்படலாம் என இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.