இராணுவத்தின் 81 உயர் பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

291
இராணுவத்தின் உயர் பதவிகள் பலவற்றுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிழக்கு, வன்னி, முல்லைத்தீவு கட்டளைத் தளபதிகளுக்கான பதவிகள் உள்ளிட்ட பல முக்கிய பதவிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக போர்ச் செயலாளராக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய போர்ச் செயலாளராக கிழக்கு கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஜனக வல்கமவும், வல்கமவின் வெற்றிடத்திற்கு மேஜர் ஜெனரல் உதயந்த விஜேரட்னவும்,

வன்னி கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா இராணுவ பணிப்பாளர் நாயகமாகவும், வன்னி கட்டளைத் தளபதியாக முல்லைத்தீவு கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் உபுல் விதானகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வன்னிப் போரின் போது 58ம் படையணிக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 53ம் படையணிக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மொத்தமாக 81 இராணுவ உயரதிகாதிகளின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

15 மேஜர் ஜெனரல்கள், 25 பிரிகேடியர்கள், 32 கேணல்கள் 8 லெப்டினன்ட் கேணல்கள் மற்றும் ஒரு மேஜர் உள்ளிட்டவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

SHARE