இராணுவத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு .

243

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலம் வரும் 22ஆம் நாளுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே, அவருக்கு சேவை நீடிப்பு வழங்கும் உத்தரவை சிறிலங்கா அதிபர் பிறப்பித்திருப்பதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாள், சிறிலங்காவின் 21 ஆவது இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Major-General-Crishantha

SHARE