இராணுவப் புலனாய்வாளர் மட்டக்களப்பில் மரணம்.

292

மட்டக்களப்பு- வாழைச்சேனையில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், உந்துருளி விபத்தில் மரணமானார். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 29ஆம் நாள் இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

sri-lanka-army-300x200

வாழைச்சேனை கிண்ணியடியைச் சேர்ந்த, பொன்னையா ஜெயராஜ் (வயது37) என்பவரே மரணமானவராவார்.

ஆயுதக்குழு ஒன்றின் உறுப்பினராக செயற்பட்ட இவர் பின்னர், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைந்து பணியாற்றினார்.

மட்டக்களப்பில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றிய வந்த இவர், பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது எற்பட்ட விபத்திலேயே மரணமானார்.

SHARE