இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என இரகசிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிறந்த அதிகாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளியிட்டு, அந்த திறமையான அதிகாரிகளை காட்டிக் கொடுக்க வேண்டாம்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மோசமான அதிகாரிகளை பாதுகாத்துக் கொள்ள ஒட்டுமொத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினையும் இவ்வாறு காட்டிக் கொடுப்பது மிகவும் சோகமான ஒர் நிலைமையாகும்.
பிரகீத் எக்னெலிகொட கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் வரையில், எக்னெலிகொட புலிகளுடன் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்படவில்லை.
கொலையுடன் தொடர்புடைய சகல விபரங்களும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்தததனைத் தொடர்ந்து, எக்னெலிகொடவை புலியாக அடையாளப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள், அது தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்ட விபரங்களை ஊடகங்களில் ஊடாக வெளியிட சில இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வாறான காட்டிக் கொடுப்புக்கள் தவிர்க்க வேண்டுமெனவும் இரகசிய பொலிஸார், இராணுவத்திடம் கோரியுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.