இராணுவ சீருடைய துணிகளுடன் ஒருவர் கைது

219

பதுளை, மடுல்சீமை படவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இராணுவ சீருடைய துணிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 18 நபர்களின் கடவுச்சீட்டுகளும், 7 தேசிய அடையாள அட்டைகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மடுல்சீமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

SHARE