அமெரிக்க கடற்படையை சேர்ந்த நாய் ஒன்றுக்கு சிறந்த சேவையாற்றியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.ஜேர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த 12 வயதான லூக்கா என்ற நாய்க்கு “Dickin Medal” வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றியதற்காகவும், வெடி மருந்துகளை மோப்பமிட்டு கண்டுபிடித்த காரணத்திற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது. கடற்படையை சேர்ந்த நாய் ஒன்று இவ்வகையான விருதை பெறுவது இதுவே முதன்முறையாகும். மேலும் ஆப்கானிஸ்தானில் பணியில் இருந்த போது, 30 பவுண்ட் எடையுள்ள வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளதுடன் தனது இடது காலையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |