இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி சிறுபான்மையினருக்கு கிடைத்த அங்கீகாரம்

346

 

இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைதிருப்பதானது சிறுபான்மை சமூகங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே அமைகின்றது என நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தெரிவித்துள்ளது.

Sampanthan-Chandrika

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக இலங்கையின் அரசியல் ஒழுங்கில் நம்பிக்கை தரக்கூடிய பல்வேறு மாறுதல்கள் இடம்பெற்றுள்ளன. 2009களில் ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்த போதிலும் சிறுபான்மை சமூகங்களை அடக்கி ஆளுகின்ற அரசாங்கமே பதவியிலிருந்தது.

சிறுபான்மை சமூகங்களையும் தாண்டி தேசிய நலன்களுக்கு குந்தகம் ஏற்படும் விதத்திலும் நாட்டின் அமைதி, ஐக்கியம் என்பவற்றிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விதத்திலும் கடந்த அரசாங்கம் செயற்பட்டு வந்தது.

2015இன் ஆரம்பத்தில் மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை அத்தகைய அராஜக ஆட்சிக்கு விழுந்த முதலாவது அடியாகும். அதனைத் தொடர்ந்து எமது தேசத்தில் ஒரு புதிய ஜனநாயக ஒழுங்கு கட்டியெழுப்பப்படுகின்றது. ஐக்கிய தேசியகட்சிக்கும், ஸ்ரீலங்கா சுததந்திர கட்சிக்கும் இடையில் உடன்பாட்டோடு கூடிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட்டிருப்பது மற்றுமொரு நல்ல விடயமாகும்

அதேபோன்று ஏதிர்கட்சி தலைவராக இரா.சம்மந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் ஒரு நல்ல மாற்றமே. இவை அனைத்தும் சிறப்பான மாற்றங்கள். இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதும் ஜனநாயக வெளியை மாசுபடுத்தாது பேணிப் பாதுகாப்பதும் எம் எல்லோரினதும் கடமையாகும். குறிப்பாக சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வை பெற்றுக் கொள்வதும் எம் முன்னால் இருக்கின்ற மிகப் பெரிய பொறுப்புமாக இருக்கின்றது.

நாம் தேசிய நலன்சார்ந்த விடயங்களிலும் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யக்கூடிய செயற்பாடுகளில்லும், சிறுபான்மை சமூகங்களின் நீதியான தீர்வுமுயற்சிகளிலும் எதிர்கட்சித் தலைவரோடு இணைந்து செயலாற்றுவதற்கு விருப்பம் கொண்டிருக்கின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த தேர்தலில் பெற்றுக்கொண்ட மகத்தான மக்கள் ஆணையின் அடிப்படையில் சமூக நீதிக்காகவும், நல்லாட்சி விழுமியங்களுக்காகவும், என்றும் குரல்கொடுக்கின்ற தனது பணியில் முன்னோக்கியே பயணிக்கின்றது, அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு எமது விஷேட வாழ்த்துக்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE