இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்த ராம்கிஷோர் என்ற அந்த மாணவர் தண்ணீரில் இயங்கும் வகையில் இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். எந்தவொரு வாகனமாக இருந்தாலும் , அது இயங்குவதற்கு பெட்ரோல், டீசல் போன்ற பல்வேறு வகையான எரிபொருள் தேவைப்படுகிறது. தற்போது இதுபோன்ற எரிபொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,
தண்ணீரை எரிபொருளாகப் பயன்படுத்தும் முயற்சியில் மாணவர் ராம்குமார் ஈடுபட்டார். மின் வேதியியல் முறையில், தண்ணீரில் இருந்து, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய இரண்டையும் பிரித்த பின், குறைந்த மின் சக்தி மூலம் அதிக அளவிலான ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்யும் வகையில் அவர் இந்த கண்டுபிடிப்பை மேற்காண்டார். இந்த வகையில் பெறப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஒரு எரிபொருளாக மாற்றப்படுகிறது. அதற்கேற்ப வாகனமும் வடிவமைக்கப்படுகிறது.