இரு நாள் விவாதம் இன்று ஆரம்பம்: நாடாளுமன்றுக்கு பெரும் பாதுகாப்பு!

344

பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமையும், நாளை செவ்வாய்க்கிழமையும் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்து, விவாதத்தை ஆரம்பித்து வைப்பார். ஜனாதிபதியிடம் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் வகையில் அமையும் இந்த சட்டமூலம் தொடர்பிலான நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதம் 21ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமான அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் 100 ஆவது நாள், கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவிருக்கின்றது புதிய அரசாங்கத்தினால் 23 உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் மிகவும் முக்கியமானதாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் பேசப்பட்டது. இந்நிலையில், 19ஆவது திருத்தத்தின் ஊடாக , ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கமுடியாது என்று எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் குறித்த திருத்தத்தை சபையில் சமர்ப்பிபதிலேயே அரசாங்கம் கடும் சவால்களை எதிர்கொண்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

sl 2

 

SHARE