பெண்ணொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான பெண்ணை, கழுத்தை நெறித்து கொலை செய்ததாக குற்றவாளிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றம் செய்த நபருக்கு எதிராக சட்டமா அதிபர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் கலேன்பிந்துனுவெவ பிரதேச விசாரணைகளை நெறிப்படுத்தியிருந்தனர்.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன, குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்துள்ளார்.
கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கே இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.