இரு மடங்கு துகள்களை வெளியேற்றும் கருந்துளை முதன் முறையாக கண்டுபிடிப்பு

228

சூரியனையே விழுக்கும் ஆற்றல் கொண்ட கருந்துளையின் ஆபத்து தொடர்பில் அண்மையில் இறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங் முன்கூட்டியே தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இரு மடங்கு துகள்களை வெளியேற்றிக்கொண்டிருக்கும் கருந்துளை ஒன்றினை முதன் முறையாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பூமியிலிருந்து 800 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூரியனின் பருமனை விடவும் மில்லியன் மடங்கு பெரிதானதாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Hubble Space Telescope எனும் தொலைகாட்டியின் ஊடாகவே இக் கருந்துளை அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE