புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வாகனங்களின் விலைகள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன. வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் மஹிந்த சரத்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட யோசனைப்படி நவம்பர் 18. 2015 முதல் சுங்கத்தீர்வையும், சுங்க மதிப்பீட்டு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இறக்குமதி வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. குறிப்பாக வாகனம் ஒன்றின் விலை சுமார் 5 லட்சம் ரூபாய்களால் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.