இறக்குவானையில் மண்சரிவு அபாயம்- மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி

595
மண்சரிவு அபாயத்தினால் இறக்குவானையில் 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்குவானை – மாதம்பை – இலக்கம் 2 பகுதியிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாதம்பை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 55 பாடசாலை மாணவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வழங்குவதாக கொடக்கவெல பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மக்களுக்கு மாற்று இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

அதற்கான நடவடிக்கைகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த பகுதியில் 2002ஆம் ஆண்டு மண்சரிவு அபாயம் ஏற்பட்டதை அடுத்து, இந்த மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இ்ந்த மக்கள் மாற்று இடங்களில் குடியமர்த்தப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE