மனிதர்களில் சிலர் தங்களின் தற்போதைய வாழ்க்கையையே சரியாக கையாளத் தெரியாமல், இறந்து விட்டால், கஷ்டங்கள் வராது என்று நினைக்கிறார்கள்.
ஆனால் மரணத்திற்குப் பின் ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் அவர்களிடம் பேசுவது உண்மையா? என்பது உங்களுக்கு தெரியுமா?
இறந்தவர்களிடம் பேசுவது என்பது உண்மையா?
ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் சிலர் அதையும் தாண்டி, மரணத்திற்குப் பிறகு ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் என்பதை தெரிந்துக் கொள்ள ஆவிகளுடன் பேசுவது போன்ற பல்வேறு வகையான முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
தங்களை ஆவிகளுடன் பேசுகிற மீடியம் என்று கூறிக் கொள்பவர்களை அணுகி ஏற்கனவே மரணம் அடைந்தவருடன் தொடர்பு கொண்டு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி அறிய ஆர்வம் காட்டுகிறார்கள்.
மீடியம் என்று சொல்லிக் கொள்பவர்களாக இருந்தாலும், அவர்கள் மூலம் இறந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள நினைப்பவர்களும் ஒரு விஷயத்தை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித மனதிற்கென்று பல பரிமாணங்கள் உண்டு. அது பல வகையில் அனைவரையும் ஏமாற்றும். இதை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் நம்பக் கூடிய வகையில் பேய், பிசாசு, ஆவி மற்றும் கடவுள்களை எல்லாம் உருவாக்கி அதை உண்மை என்று கூட நினைக்கலாம்.
ஆனால் அத்தகைய அனைத்து மாயைகளை ஏற்படுத்துகிற ஆற்றல் நமது மனதுக்கு உண்டு.
எனவே இது உண்மையல்ல, கற்பனையோடு கலந்த மற்றவர்களின் உளவியல் ரீதியாக உணர்வு என்று கூறலாம்.
எனவே இது வாழ்க்கையில் மனிதர்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் துணை செய்யாது. மேலும் இதை ஒரு பொழுதுபோக்கு என்று கூட கூறலாம்.