இறந்தும் வாழ வைக்கும் இலங்கை அகதி!

255

தமிழ்நாடு – கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த அகதியொருவரின் உடல் உறுப்புகள் சிலருக்கு உதவும் வகையில் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 61 வயதான சத்தியசீலன் என்பவர் சமீபத்தில் வீதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

பின்னர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நினைவு திரும்பாமல் மூளைச்சாவு நிலையை அடைந்து விட்டதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையறிந்து, சத்தியசீலனின் உறவினர்கள், நன்றாக இயங்கும் நிலையில் உள்ள அவரது உடலுறுப்புகளை தானமாக வழங்க தீர்மானித்துள்ளனர்.

இதையடுத்து, சத்தியசீலனின் ஈரல், இரு விழிகள், மற்றும் தோல் பகுதியும் அங்குள்ள மூன்று மருத்துவனைகளுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.sl

SHARE