இறந்து போனதாய் கருதியவர் உயிருடன் திரும்பிய அதிசயம்

308
மொரோக்கோ நாட்டில் விபத்தில் இறந்து போனதாய் கருதிய நபரொருவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொரோக்கோ நாட்டில் உள்ள அஸிலால் என்ற பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர் அப்ராக் முகமது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு வாகன விபத்தில் இவரது மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Casablanca பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபத்தில் சிக்கிய பெண்மணியை சோதித்த மருத்துவர்கள் பிழைக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில், விபத்து குறித்து தகவலறிந்த முகமது அவரது கிராமத்தில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்து குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

ஆனால் விபத்தில் சிக்கிய அந்த பெண்மணி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை பெற்றுக்கொண்டு சொந்த கிராமத்திற்கு வந்து அடக்கமும் நடைபெற்றுள்ளது.

இதனிடையே முகமதுவின் நண்பர்கள் சிலர் தொலைந்து போனவர்கள் குறித்த நிகழ்ச்சி ஒன்றினை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது முகமதுவின் மனைவியை போன்ற ஒருவர் தமது கணவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டு அந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, 2 ஆண்டுகளுக்கு முன்னர் முகமது அடக்கியது வேறு பெண்மணி எனவும் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்ததன் பின்னர் என்ன நேர்ந்தது என்பது இதுவரை புதிராகவே இருந்து வருவதாக முகமது தெரிவித்துள்ளார்.

SHARE