இறந்து போன கணவரின் சடலத்துடன் வாழ்ந்த மனைவி!

249

625.500.560.350.160.300.053.800.748.160.70

ரஷ்யாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்து போன கணவனை மந்திரங்கள், புனித நீரின் மூலம் மனைவி, மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 76 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்து போய் விட்டார்.

வீட்டில் உள்ள ஷோபாவில் சடலத்தை போட்டதுடன் தொடர்ச்சியான பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.

மீண்டும் கணவர் உயிர்பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையில், அவர் மீது புனித நீரை தெளித்து பல்வேறு மந்திரங்களையும் கூறியுள்ளார்.

சமீபநாட்களாக மிக கடுமையான நாற்றம் வந்ததை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் சோதனையிட்டதில் சடலத்தை கைப்பற்றியதுடன் உண்மைகளும் வெளிவந்துள்ளது.

மேலும் Battle of Extrasensory என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அடிமையாக இருந்ததும், இதன் அடிப்படையிலேயே கணவனுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி செய்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

SHARE