கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த வவுனியா மதகுவைத்த குளத்தை சேர்ந்த பாடசாலை சிறுவன் மனிது நிம்சரவின் உடல் பிணவறை குளிரூட்டியில் வைக்காத காரணத்தால் உடல் பழுதடைந்ததாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 20-07-2016 கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த வவுனியா மதகுவைத்த குளத்தை சேர்ந்த பாடசாலை சிறுவன் மனிது நிம்சரவின் உடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் சீல் வைக்கப்பட்ட நிலையிலேயே பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் ஏன் சீல் வைக்கப்பட்டது என கேட்டபோது வவுனியா வைத்தியசாலையின் பிணவறையின் குளிரூட்டி இயங்காத காரணத்தால் சிறுவனின் உடலை குளிரூட்டியில் வைக்க முடியாத நிலையேற்றபட்டதாகவும் அதனால் சிறுவனின் உடல் பழுதடைந்தாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறுவனின் உடலம் அழுகிய நிலையில் உடலம் வைக்கப்பட்ட பெட்டி தம்மிடம் கையளிக்கப்பட்டதால் உறவுகள் இறுதியாக சிறுவனின் முகத்தை கூடபார்க்க முடியாத நிலையினை வைத்தியசாலை நிர்வாகம் ஏற்படுத்தியதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
தமது நிலை இனி எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது என பெற்றோர் வடக்கு மாகாண சுகாதாரதுறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.