தந்தை, தாய், மகன் அடங்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 03 பேர் பாரிய காயத்திற்குள்ளானதுடன் இவர்களின் கடையில் தொழில் புரியும் 02 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற (எல்ஏச்) வாகனம் ஒன்று 15.11.2015 அன்று இரவு 11 மணியளவில் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை கெரண்டியல பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 05 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயத்துக்குள்ளானவர்கள் கொழும்பில் இருந்து நுவரெலியாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று மீண்டும் கொழும்பு செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)