கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில் 16.12.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் இறம்பொடை பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லையை சேர்ந்த மொஹொமட் நிஸ்ராஸ் என்ற 17 வயது சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவருடன் பயணித்த சிறுவர்கள் இருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.
மேற்படி நால்வரும் முச்சக்கரவண்டியில் மாவனெல்லையிலிருந்து வெளிமடைக்கு மரண வீடொன்றுக்காக சென்றுவிட்டு மீண்டும் மாவனெல்லைக்கு திரும்புபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.