இறுதிப்போட்டிக்குள் முதன்முறையாக நுழைந்தது சென்னை:

259

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக சென்னை அணி முன்னேறியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 2வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று கொல்கத்தாவில் நடந்த 2வது சுற்று அரையிறுதிப் போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின.

முன்னதாக புனேயில் நடந்த முதல் சுற்று அரையிறுதியில் சென்னை 3-0 என வென்றிருந்தது. இதனால் இந்த போட்டியை டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நிலையில் சென்னை களமிறங்கியது.

அதேசமயம் 4 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் கொல்கத்தா அணி களமிறங்கியது.

22வது நிமிடத்தில் கொல்கத்தாவின் டீஜன் லெக்கிஜ் தனது அணியின் கோல் கணக்கை தொடங்கினார். முதல் பாதி ஆட்டம் முடிவடையும் 87வது நிமிடத்தில் இயன் ஹீயூம் 2வது கோலை அடித்தார்.

அதே போல் சென்னை அணியின் பிக்ரூ 92 நிமிடத்தில் சென்னைக்காக கோல் அடித்தார். முடிவில் கொல்கத்தா 2-1 என வென்ற போதும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டது.

அதேசமயம் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் சென்னை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அதாவது முதல் சுற்று அரையிறுதியில் சென்னை 3-0 என வெற்றி பெற்றது. 2வது சுற்று அரையிறுதியில் கொல்கத்தா 2-1 என வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்தமாக சென்னை 4-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எதிர்வரும் 20ம் திகதி கோவாவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கோவா- சென்னை அணிகள் மோதுகின்றன.

SHARE