போரின் போது இலங்கை பின்பற்றிய உத்திகளைக் கையாளவேண்டும் என்று கூறுபவர்கள் இறுதிப் போரின்போது இங்கு நடந்தவை குறித்து போதுமான அறிவைக் கொண்டிராதவர்கள் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகண்ட வழியில் நாமும் தீர்வுகாண வேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
போரின்போது இலங்கை பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என துருக்கிய அரசியல்வாதியொருவர் தெரிவித்ததாக அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து வினவியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.