அல் எட்டிஃபாக் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அல் நஸர் த்ரில் வெற்றி
கிங் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் கால்இறுதிப் போட்டிக்கு அல் நஸர் அணி முன்னேறியது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடிக்கவில்லை.
இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், கடைசி நேரத்தில் மானே கோல் அடித்து வெற்றி பெற வைத்தது ஒட்டுமொத்த அல் நஸர் ரசிகர்களையும் உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
ரொனால்டோ நெகிழ்ச்சி பதிவு
இந்த நிலையில் ரொனால்டோ ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில்,
‘அணியினரின் அற்புதமான கூட்டு முயற்சி! எங்கள் ரசிகர்களின் நம்பமுடியாத ஆதரவு தான் இறுதிவரை போராட எங்களுக்கு உதவியது!’ என தெரிவித்துள்ளார்.கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் அணிக்காக 40 போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.