பிரபல குணச்சித்திர நடிகை என்பதை விட, ஒரு சின்னத்திரையின் ஷோ பெயரை சொன்னால் இவரை எல்லோருக்கும் தெரிந்துவிடும், ஆமாங்க, அந்த் பஞ்சாயத்து ஷோவை முன்பு தொகுத்து வழங்கியவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இவர் தற்போது ’அம்மனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது இவரே இறந்து போல் ஒரு காட்சியில் நடித்தார். இந்த காட்சியை இவரே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சியை இவருடைய இளைய மகள் பார்த்து மிகவும் மணம் வருந்த, பின் இதெல்லாம் வெறும் நடிப்பு தான் என்று கூறி சமாதனம் செய்துள்ளார்.