இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை.-முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் கருணா

510

 

இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

39937843_leader

அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டன என்பது உண்மையே. நான் என்றும் மதிக்கும் ஒரு தலைவர் பிரபாகரன். அவரது தியாகத்தையும், ஒழுக்கத்தையும் நாம் மதிக்க வேண்டும். போராட்டத்தில் மரணித்தவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். – என்றார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘அக்னிப்பரீட்சை’ நிகழ்ச்சிக்கு கருணா அளித்த பேட்டியின் விவரம்

SHARE