இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படக்கூடிய சாத்தியம்:

239

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னாருக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலத்தை அமைக்கும் திட்டமொன்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் இந்த பாலம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.india srilanka_CI

SHARE